சினிமா

மறைந்த பின்னணி பாடகி ஜானகியின் இறுதிச்சடங்கு எப்போது? இறுதி மரியாதை செய்ய குவியும் பொதுமக்கள்..

தென்னிந்தியாவின் இசைக்குயில், பல தலைமுறைகளின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்கள் (1938–2026) காலமானார். 1957-ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தனது இனிமையான குரலால் 17 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

செந்தூரப் பூவே, இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட நான்கு பாடல்களுக்காகத் தேசிய விருதுகளை வென்றதோடு, மொத்தம் 33 வெவ்வேறு மாநிலத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே. யேசுதாஸ் போன்ற கலைஞர்களுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளன. இவரது உடல் வைக்கப்படவுள்ள மைதானத்தில் பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலங்கள் கடந்தாலும், இவர் பாடிய பாடல்கள் மூலம் நம்மிடையே என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார். இவரது மறைவு இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்