இந்தியா

தவெக அரசு மீது புகார் அளித்து திமுக கடிதம்.. ஆளுனர் மாளிகைக்கும் புகார்…

தமிழக வெற்றி கழகம் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக கூறி, தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டினை த.வெ.க.வினர் அணுகி குதிரைபேரம் நடத்தியதாகவும், அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து த.வெ.க.வில் இணையுமாறு வற்புறுத்தியதாகவும் தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், வைகோவின் பேச்சின் அடிப்படையில், த.வெ.க.வினர் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துவது குறித்து வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த 6 பேர் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தது மற்றும் தி.மு.க.வின் எம்.ஆர். விஜயபாஸ்கரை கட்சி மாற த.வெ.க.வினர் அணுகியது ஆகியவற்றை சுட்டிக்காட்டி தி.மு.க. இந்த புகாரை முன்வைத்துள்ளது.

அரசு அதிகாரத்தை முறையற்ற வழிகளில் த.வெ.க. பயன்படுத்துவதாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தி.மு.க. அனுப்பியுள்ள இந்தக் கடிதம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்