நட்புக்காக பலரும் பலவற்றையும் செய்வார்கள்.. ஆனால் சீனாவை சேர்ந்த ஒரு வாலிபர் தனது 28 கோடி சொத்தை தனது உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவை சேர்ந்த லீ என்கிற 19 வயது வாலிபர்தான் இப்படி ஒரு உயிலை எழுதி இருக்கிறார். சிறு வயதிலேயே தனது பெற்றோர் விவகாரத்து பெற்றடோடு வேறு திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது சொத்துக்களை அதிகம் நம்பும் ஒருவருக்கு அளிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்..
தனது மறைவுக்கு பின் 28 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் உயிர் தோழனுக்கு கொடுக்க வேண்டும் என அவர் உயில் எழுதியிருக்கிறார். மேலும் சீனாவில் உள்ள சமூகவலைத்தளங்களில் இது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

