இந்தியா

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் குழுவில் ரகுராம் ராஜன்: கொள்கைகளை மறுஆய்வு செய்ய புதிய அதிரடி நியமனம்!

அமெரிக்காவின் மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி அந்நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பணவியல் கொள்கைகளை மறுவடிவமைப்பு செய்யவும் தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட மூன்று இந்திய வம்சாவளி நிபுணர்களை உள்ளடக்கிய ஐந்து விசேஷ பணிக்குழுக்களை ஃபெடரல் ரிசர்வ்ப் புதிய தலைவர் கெவின் வார்ஷ் அறிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன், ஹார்வர்ட் பொருளாதார நிபுணர் கரேன் டைனன் மற்றும் முன்னாள் ஃபெடரல் ரிசர்வ் கவர்னர் ஜெரமி ஸ்டெய்ன் ஆகியோருடன் இணைந்து ‘பேலன்ஸ் ஷீட் பாலிசி’ பணிக்குழுவில் பணியாற்ற உள்ளார். இக்குழு, அமெரிக்க மத்திய வங்கியின் தற்போதைய சொத்து இருப்புகள், அதன் செலவுகள் மற்றும் பணவியல் கொள்கைகளில் அவற்றின் தாக்கம் குறித்து விரிவான மறுஆய்வு செய்யும்.

இவர்களுடன் டெல்லியில் பிறந்த அமெரிக்க பொருளாதார நிபுணர் ராஜ் செட்டி ‘பொருளாதார தரவுக் குழுவிலும்’ , மைக்ரோசாப்ட் எக்ஸிகியூட்டிவ் ஆஷா சர்மா ‘உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புக் குழுவிலும்’ நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பணிக்குழுக்களில் நோபல் பரிசு பெற்ற தாமஸ் சார்ஜென்ட், வால்மார்ட் முன்னாள் சிஇஓ டக் மெக்மில்லன் போன்ற உலகின் சிறந்த அறிஞர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்