உலகம்

ஈரான் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்!.. இந்தியாவின் கோடிக்கணக்கான மூதலீடுகள் கேள்விக்குறி!..

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாகவே போர் நடைபெற்று வருகிறது. இடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டாலும் ஹார்மூஸ் நீரிணை வழியாக வரும் கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தியதால் கோபப்பட்ட அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியிருப்பதோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகவும் அறிவித்திருக்கிறது..

அதுவும் கடந்த சில நாட்களாகவே ஈரானின் பல இடங்களில் குறி வைத்து அமெரிக்கா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் இராணுவ தளங்கள் அமைந்திருக்கும் சவுதி அரேபியா, துபாய், பக்ரைன், கத்தார், அபுதாபி, குவைத் மற்றும் ஈராக் போன்ற வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில்தான், ஈரானின் சபஹர் துறைமுகத்தில் இருந்த கடல்சார் கண்காணிப்பு கோபுரத்தை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது. மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்வதற்காக இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட இந்த துறைமுகம், தற்போது அமெரிக்காவின் தாக்குதலில் சிக்கியிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் கோடிக்கணக்கான முதலீடுகள் மற்றும் புதிய வர்த்தகத் திட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த