கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் The Odyssey/ கடந்த ஒரு மாத காலமாக இந்த படத்திற்கு உலக அளவில் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது. இந்தியாவிலும் கூட கிறிஸ்டோபர் நோலனுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதேநேரம் இந்த படம் IMAX 70 mm கேமராவில் ஷூட் செய்யப்பட்டது. ஆனால் IMAX 70 mm தியேட்டர் இந்தியாவில் எங்குமே இல்லை. உலக அளவில் 40 இடங்களில் மட்டுமே இந்த தியேட்டர் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த படத்தை காண இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். தமிழகத்திலும் கூட இந்த படம் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை படம் வெளியான போது இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வர துவங்கியது..
இந்நிலையில் படம் வெளியான இரண்டு நாட்களில் இந்த திரைப்படம் இந்தியாவில் ரூ.40 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அனேகமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த படம் 50 கோடி வசூலி தாண்டும் என கணிக்கப்படுகிறது. உலக அளவில் The Odyssey திரைப்படம் 257.8 மில்லியன் டாலர் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

