கலைஞர் கருணாநிதியின் பேரனும், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் மகனுமான உதயநிதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கிறார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தபிறகு அந்த கட்சியையும், முதல்வர் விஜயையும் அவர் கடுமையாக விமர்சித்தும், நக்கலடித்தும் பேசி வருகிறார். கடந்த சில நாட்களாகவே உதயநிதி ஸ்டாலினும், அவரின் தந்தை முக ஸ்டாலினும் லண்டன் சென்று அங்கு உதயநிதியின் மகன் இன்பநிதியின் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அதன்பின் அவர்கள் இருவரும் சென்னை சென்னை திரும்பினர்.
இந்நிலையில், உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் ‘ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.. கொள்கைப்படி மக்கள் பணிகளை களத்திற்கும், காலத்திற்கும் ஏற்றார் போல் முன்னெடுக்க காத்திருக்கும் இளைஞர் அணியின் அடுத்து இன்னிங்ஸ்சை ஆரம்பிக்கலாமா?’ என எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

