இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு பதவியேற்றவுடன் தொடர்ந்து மற்ற நாடுகள் மீது போரை துவங்கினார். ஈரானின் தாக்குதலில் காசா நாடு பேரழிவை சந்தித்தது. பல்லாயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதில் குழந்தைகளும் அடக்கம். ஆனாலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு இரக்கம் பிறக்கவில்லை.
காசாவை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டு அடுத்து ஈரான் நாட்டின் மீது போரை தொடங்கியது இஸ்ரேல். அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கியது. இஸ்ரேலின் தாக்குதலில்தான் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். அதில் குழந்தைகளும் அடக்கம். தற்போது ஈரானின் உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் மொஜ்தபா காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதற்கும் இஸ்ரேல்தான் காரணம்..
இந்நிலையில்தான் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐநா பொதுச் சபை கூட்டத்திற்காக நியூயார் நகரத்திற்கு வரும் இஸ்ரேல் பிரதமர் நெடஹ்ன் யாகுவை நான் கைது செய்வேன் என அந்நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி கூறியிருக்கிறார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நெதன்யாகு நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர். இது குறித்து சட்டத்துறையுடன் நான் ஆலோசித்து வருகிறேன்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.

