சினிமா

நயன்தாரா – கவின் கூட்டணியில் ஹாய் படத்தின் ரசகுல்லா பாடல் ப்ரோமோ வெளியீடு

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா, தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இளம் நடிகர்களில் முன்னணி நாயகனாக வளர்ந்து வரும் கவினுடன் அவர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ஹாய் (Hi). முற்றிலும் வித்தியாசமான காதல் மற்றும் ஃபீல் குட் கதைக் களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தை இளம் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் இயக்கும் முதல் படமிது. வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹாய் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் உருவாகியுள்ள ரசகுல்லா என்ற துள்ளலான காதல பாடலின் ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இப்பாடலின் முழு வீடியோ நாளை (ஜூலை 22-ஆம் தேதி) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்