சினிமா

செயற்கை முறையில் கருத்தரிக்க 1000 ஊசிகள் போட்டு கொண்ட பிரபல நடிகை.. அதிர்ச்சி தகவல்…

பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றுக்கொண்ட தனது அனுபவம் குறித்து பேசிய அவர், தான் ஐந்து முறை ஐவிஎஃப் சிகிச்சை செய்துகொண்டதாக வெளிப்படையாக தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு சென்று ஊசிகள் போட்டுக்கொள்வது மனதளவில் மிகவும் கடினமானது என்றும், இந்த செயல்முறை மிகுந்த வேதனையை தந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததே தன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை பாதித்ததாகக் கூறிய அவர், பெண்கள் 35 வயதுக்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

ஐவிஎஃப் சிகிச்சையின்போது உடல்ரீதியாக 1,000-க்கும் மேற்பட்ட ஊசிகளை எடுத்துக்கொண்டதால் தனது உடல்நிலை மாறியதாகவும், ஐந்து முறை முயன்றதில் இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டு, ஐந்தாவது முறையே தனக்கு குழந்தை பிறந்தது என்றும் அவர் கூறினார். பத்மினி கோலாபுரே மற்றும் ஷிவாங்கி கோலாபுரேவின் தங்கையான தேஜஸ்வினி, நடிகை ஷ்ரத்தா கபூரின் அத்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்