திரையுலகில் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் சுந்தர்.சி. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பெல்லாம் வெளியானது. ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். தற்போது ரஜினியின் 173வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்..
ரஜினி படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டு நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2, விஷாலை வைத்து புருஷன் ஆகிய திரைப்படங்களை சுந்தர்.சி இயக்கி முடித்திருக்கிறார்.
இந்நிலையில்தான் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதேதேதியில் சுந்தர்.சி தனது புருஷன் திரைப்படத்தையும் வெளியிட முடிவெடுத்திருக்கிறாராம்.
ரஜினி படத்திலிருந்து வெளியேறியது காரணமாக அவருக்குள் இருக்கும் கோபம் காரணமாகவே புருஷன் படத்தை ரஜினியின் ஜெயிலர் 2 படத்தோடு அவர் மோதவிடுகிறார் என திரை உலகில் பேசுகிறார்கள். புருஷன் படத்தில் விஷாலுக்கும், தமன்னாவுக்கும் இடையே ஒரு கவர்ச்சி பாடலை வைத்திருக்கிறாராம் சுந்தர்.சி. இந்த பாடலே படத்தை ஹிட் பண்ணி கொடுக்கும் எனவும் அவர் நம்புகிறாராம்.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு தமன்னா ஆடிய காவாலா பாடலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது அதே ஆயுதத்தை ஜெயிலர் 2 படத்திற்கு எதிராக சுந்தர்.சி கையிலெடுக்கிறார் என திரையுலகில் பேசுகிறார்கள்.

