சினிமா

கிடப்பில் போடப்பட்ட அஜித் படம்!..

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே அஜித் தனது அடுத்த படத்திலும் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. சிலமுறை ஆதிக் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் இந்த படத்தை பற்றி பேசினார்.. அதோடு சரி..

அதன்பின் இந்த படத்தை பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுவரை இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடிக்க அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார். ஆனால், அவ்வளவு பணத்தை கொடுக்க தயாரிப்பாளர் முன் வரவில்லை. ஏனெனில், அஜித் படத்தின் மொத்த வியாபாரமே 200 கோடிதான்.

இதில் அஜித்துக்கு 185 கோடி மற்றும் 70,80 கோடி செலவில் ஷூட்டிங்கை நடத்தி படத்தை எடுத்தால் நஷ்டத்தில் முடியும் என்பதுதான் தயாரிப்பாளர்களின் கணக்காக இருக்கிறது. அஜித் தனது சம்பளத்தை 100 கோடியாக குறைக்கணும்.. அப்படி இல்லையென்றால் லாபத்தில் பங்கு என்கிற சதவீத அடிப்படையில இந்த படத்தில் அஜித் நடிக்கவேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மும்பைக்கெல்லாம் சென்று தயாரிப்பாளர்களை தேடினார்கள் ஆனால் எதுவும் டேக் ஆப் ஆகவில்லை. இந்நிலையிக்தான் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியிருக்கிறார்கள். அந்த நிறுவனம் கணக்கெல்லாம் போட்டு பார்த்துவிட்டு இவ்வளவு பட்ஜெட் சரியாக வராது என சொல்லி அனுப்பி விட்டார்களாம். எனவே, அஜித் தனது சொந்த பணத்தில் மட்டுமே படத்தை எடுக்க முடியும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்