சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் பல அமைப்பு சேர்ந்த மாணவர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி மாணவர்கள் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட குற்ற பின்னணி இல்லாதவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது..
போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்ற ஆணை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதோடு நீட் முறைகேடு தொடர்பாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி, பீகார், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
மேலும் மாணவர் போராட்டம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாத்து வைக்க வேண்டும் எனவும், மாணவர்களின் மீது எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

