ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்த கருப்பு திரைப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் சூர்யாவின் அடுத்த படமாக விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கிறது. அதில் முதலில் வெளியான பாடல் ரசிகர்களுக்கு பிடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
இந்நிலையில்தான், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சேட்டிலைட் உரிமை இதுவரை விற்கப்படாமல் இருக்கிறதாம். தயாரிப்பாளர் கேட்கும் விலை அதிகமாக இருப்பதால் அந்த விலைக்கு உரிமையை வாங்க நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. சூர்யாவின் முந்தைய படமான கருப்பு சூப்பர் ஹிட் அடித்தும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் சேட்டிலைட் உரிமை இதுவரை விற்கப்படாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேநேரம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை ஏற்கனவே விற்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

