சினிமா

அஜித்தின் புதிய படம் டேர் டெவில்!.. வெளியான அறிவிப்பு!..

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் அஜித் எந்த புதிய படங்களிலும் நடிக்காமல் இருந்தார். தொடர்ந்து கார் ரேஸிலும் அவர் ஈடுபட்டு வந்தார். அவரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் ஷூட்டிங் தற்போது வரை துவங்கப்படாமல் இருக்கிறது.

அஜித் தனக்கு சம்பளமாக ரூ.185 கோடி கேட்பதால் அந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில்தான், அஜித்தின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு டேர் டெவில் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை அஜித்குமார் சொந்தமாக தயாரிக்கவுள்ளார். போஸ்டரில் தயாரிப்பாளர் ஷாலினி அஜித் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அஜித் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கு பிரேவ் ஹாட்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். குட் பேட் அக்லி படம் வெளியாகி 14 மாதங்களுக்கு பின் அஜித்தின் புதிய பட அறிவிப்பு வெளியாகியிருப்பது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்