இந்தியா

அரசியல்கட்சி துவங்கமாட்டோம்!.. அது வேஸ்ட்!.. CJP நிறுவனர் அபிஜீத் திப்கே பேட்டி!..

ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இளைஞர்களால் தொடங்கப்பட்டதுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. பெயரில் கட்சி இருந்தாலும் அவர்கள் இன்னும் அரசியல் கட்சியாக செயல்படவில்லை. மக்கள் இயக்கமாகவே செயல்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கூறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் இளைஞர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக தர்மேந்திர பிரதான் பதவி விலக நேர்ந்தது. இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை நிறுவனர் அபிஜித் திப்கே..

இந்நிலையில், ‘நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?’ என நிருபர்கள் கேட்டதற்கு பதில் சொன்ன அபிஜித் திப்கே ‘ எங்களுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை வைத்து அரசியல் கட்சிகளை எப்படி பாஜக உடைக்கும் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. தேர்தலில் வாக்குகள் நீக்கப்படுகின்றன..

அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துகொண்டிருக்கும் நிலையில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கி நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?.. நீதித்துறை, தேர்தல் முறை மற்றும் ஊடகங்கள் மீதும் கூட மக்கள் நம்பிக்கை இழந்த விதத்தை பார்க்கும் போது இந்த நாட்டிற்கு மக்கள் இயக்கம்தான் தேவைப்படுகிறது’ என தெளிவான பதிலை கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்