இந்தியா

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!.. யார் யாரோயோ கோட்டைக்கு அனுப்பிட்டீங்க!. சீமான் கோபம்!..

15 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியவர் சீமான். திரைத்துறையில் உதவி இயக்குனர் மற்றும் இயக்குனராக வலம் வந்த சீமான் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தார். அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக நாம் தமிழர் கட்சி விளங்கியது.

எனவே குறிப்பிட்ட சதவீதம் இளைஞர்கள் இந்த கட்சியையும், சீமானையும் ஆதரித்தனர். இதன் காரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை வாங்கியது. 30 லட்சம் பேர் இந்த கட்சிக்கு வாக்களித்திருந்தனர். 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியும் சீமான் உள்ளிட்ட சிலர் வெற்றி பெற்ற சட்டசபைக்கு செல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

டெபாசிட் கூட வாங்கவில்லை. இது சீமானுக்கு ஏமாற்றத்தை தந்தது மக்களின் மீது கோபமும் வந்தது. ஆனால் அதை மக்களிடம் காட்ட முடியவில்லை என்றாலும் அவ்வப்போது மேடைகளில் பேசும்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீமான் ‘நாங்க போடாத போராட்டம் இல்லை.. பெறாத வழக்கு இல்லை.. பார்க்காத சிறை இல்லை.. ஆனால் எங்களை கோவிலுக்கு நேர்ந்துவிட்ட மாடு மாதிரி ரோட்டில் விட்டிருக்கீங்க.. வந்தவன் போனவன் எல்லாம் கோட்டைக்கு அனுப்பிட்டீங்க’ என்று பொங்கியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்