சினிமா

ரஜினி ரூட்டுக்கு மாறிய அஜித்!.. டேர் டெவில் படத்தில் மோகன்லால், வெங்கடேஷ்!..

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் கடந்த ஒரு வருடமாக அஜித்தின் புதிய படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. ஒருபக்கம் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அஜித்தோ முழுக்க முழுக்க கார் ரேஸில் ஈடுபட்டிருந்தார். தனக்கு சம்பளமாக ரூ.185 கோடி கொடுக்கவேண்டும் என அஜித் கறார் காட்டியதால் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

எனவே, தானே தயாரிப்பாளராவது என அஜித் முடிவு செய்தார். சமீபத்தில் படத்தின் பெயர் டேர் டெவில் என்கிற அறிவிப்பும் வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில்தான், டேர் டெவில் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகவிருக்கிறதாம். இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித் இதுவரை பேன் இண்டியா படத்தில் நடித்ததில்லை.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் பல மொழி நடிகர்களையும் நடிக்கவைத்து அதை ஒரு பேன் இண்டியா படமாக மாற்றினார்கள். அதன்பின் வெளியான கூலி மற்றும் தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 படம் என எல்லாமே பேன் இண்டியா படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்