அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய போர் தற்போது வரை நிற்கவில்லை. கடந்த சில மாதங்களாக இரு நாடுகளும் அதிக அளவில் தாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் முடிவுக்கு வரவில்லை.
இடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் ஈரான் மற்றும் சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அபுதாபி போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூச் நீரிணையை ஈரான் மூடியதாலும், அந்த வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கியதாலும் கோபமடைந்த அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது..
அதோடு பேச்சுவார்த்தையில் உடன்படாததால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் Economic D-Day என்கிற பெயரில் ஈரானின் வாழ்வாதாரத்தை முடக்கவும், புதிய தடைகளை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஈரான் ‘அமெரிக்கா எங்கள் மீது பொருளாதார தடை விதித்தால் வளைகுடா நாடுகளில் இருந்து ஒரு சொட்டு எண்ணை கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி ஆக்குவோம்’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது..

