நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அதோடு கிளாடியேட்டர்ஸ் என்ற பெயரில் அவர் கார் ரேஸில் ஈடுபடுவது தொடர்பான டாக்குமென்டரி திரைப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்..
விரைவில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகவிருக்கிறது. மேலும், தியேட்டர் அல்லது ஓடிடி என ஏதேனும் ஒன்றில் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜிவி பிரகாஷ் கூறியதாவது:
இது முற்றிலும் மாறுபட்ட ஒரு பிராஜெக்ட்… இது ஒரு ஆவணத் திரைப்படம்… ஒருநாள் அஜித் சார் என்னை அழைத்து ‘ஜி.வி., உங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்… படத்தின் ட்ரெய்லரும் இசையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. நீங்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியுள்ளீர்கள்… இது உங்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும்” என்று கூறினார். நள்ளிரவு 1 மணிக்கு அவர் என்னை அழைத்து ஊக்கமளித்தார்.. அதன் பிறகு என்னால் தூங்கவே முடியவில்லை..
இது ஒரு உண்மையான திரைப்படம்… இது வெறும் ஒரு படம் மட்டுமல்ல… இது அவரைப் பற்றியது… அவரின் சிந்தனையில் என்ன ஓடுகிறது? அதை எப்படி சர்வதேச அளவில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்… அவரது தியாகங்கள் மற்றும் சொந்தப் பணத்தில் இதைச் செய்வது என… இதில் ஒரு வாழ்க்கைப் பயணமும் அடங்கியுள்ளது… எவ்வளவு பெரிய உத்வேகம்’ என ஜிவி உருகியுள்ளார்.

