நடிகர் சூர்யா துவக்கத்திலிருந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தாலும், அவ்வப்போது அதிரடி ஆக்சன் படங்களிலும் நடித்து வருகிறார். காக்க காக்க, நந்தா, ஆறு, அருள், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, அயன், காப்பான், ரெட்ரோ, கங்குவா போன்ற படங்கள் அதிரடி ஆக்சன் படங்களாக வெளிவந்தன.
அவருக்கு சூப்பர் ஹிட் படமாக வெளிவந்த கருப்பு படம் கூட ஆக்சன் காட்சிகளால்தான் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில்தான் தனது 50வது திரைப்படம் ஒரு அசத்தலான ஆக்சன் படமாக இருக்க வேண்டும் என சூர்யா முடிவெடுத்து விட்டாராம். தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் காட்சிகளை பிரமாண்டமாக எடுப்பவர்கள் இரண்டே பேர்தான்..
ஒன்று இயக்குனர் ஷங்கர்.. மற்றொருவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஏ.ஆர் முருகதாஸ் கதையை வாங்கி அந்த படத்தை ஷங்கர் இயக்குவதாக சமீபத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சூர்யாவும் இது போன்ற கதையை விரும்புவதால் அநேகமாக ஷங்கர் இயக்கத்தில் சூர்யா நடித்தால் அது சிறப்பாக இருக்கும் என சூர்யாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..

