சமீப காலமாகவே அதிக வெப்பம் காரணமாக கடல் மட்டம் உயரும் எனவும், அப்படி கடல் மட்டம் உயர்ந்தால் பள்ளத்தில் உள்ள பல நாடுகளும் நீரில் மூழ்கும். இந்தியாவிலும் பல மாநிலங்கள் பாதிக்கப்படலாம் என்கிற கருத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதிலும் எல்.நினோ என்கிற பெயரையும் அடிக்கடி நாம் பார்க்க முடிகிறது. எல்.நினோ காரணமாக வெப்ப நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நேபாளத்தில் பனிப்பாறை உறுகி நேபாள நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.. வெள்ளத்தில் சிக்கி ஆயிரம் பேர் வரை உயிரிழந்து விட்டனர். 4 ஆயிரம் பேரை காணவில்லை.. இமயமலையில் பனிப்பாறை உருகியதற்கு அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து உமிழப்படும் கார்பன் உமிழ்வே காரணம் என நேபாள நாடு பகீரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது..
இந்நிலையில்தான் சமீபத்தில் ஐநா வெளியிட்ட அறிக்கையில் கடல் மட்ட உயர்வு காரணமாக இந்தியாவில் கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கடலோர நகரங்கள் உலகில் மிகவும் ஆபத்தான பகுதிகள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2050ம் வருடத்திற்குள் கடல் மட்டம் 30 முதல் 40 செண்டிமீட்டர் வரை உயர்ந்தால் மும்பை மற்றும் கொல்கத்தாவில் வசிக்கும் 2 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இந்திய அரசு உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கான எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். இல்லையெனில் 2030-க்குள் நிலைமை மிகவும் மோசடையும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கடலோர பாதுகாப்பு சுவர்கள் அமைப்பது, பசுமை வளங்களை அதிகரிப்பது, நகரத் திட்டமிடலில் மாற்றங்கள் செய்வது, கார்பன் உமிழ்வை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

