ஈரான் அரசு அணு ஆயுதம் தயாரிக்க கூடாது எனக்கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈரன் அமெரிக்காவுக்கு ராணுவ தளங்கள் அமைக்க இடம் கொடுத்த துபாய், சவுதி அரேபியா, அபுதாபி, பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியது.
அதேபோல் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது.. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கப்பல் மூலம் கொண்டு செல்ல முடியவில்லை இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியது..
எனவே ஹார்மூஸ் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ரெனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்கவில்லை.. சில மாதங்களுக்கு முன்பு இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன..
ஆனால் ஹார்மூஸ் நீரினை வழியாக சென்ற சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் கோபமடைந்த அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது அதோடு ஈரானை கடுமையாக தாக்குவோம் எனவும் எச்சரித்தது. தற்போது ஹார்மூஸ் பகுதியில் அமெரிக்காவும், ஈரானும் மோதி வருகின்றன..
ஒருபக்கம் ஹார்மூஸை நாங்கள் கைப்பற்றி விட்டோம்.. அது தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என அமெரிக்க அதிபர் டொனாட்ல் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், ஹார்மூஸ் நீரிணையை ‘டிரம்ப் நீரிணை’ என மாற்றப் போகிறோம் என டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.. தங்களது கட்டுப்பாட்டில் தற்போது ஹார்மூஸ் இருப்பதால் ஹார்மோஸ் நீரினை முன்பே விட மிகவும் சூடாக இருக்கும் எனவும் அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

