உலகம்

சொறிஞ்சிவிட்டா ரூ.14 லட்சம் வருமானம்!.. புதுசா புதுசா யோசிக்கிறாங்க!

புதிது புதிதாக யோசித்து வருமானம் ஈட்டுவதில் ஜப்பான் மற்றும் சீனாக்காரர்கள் கில்லாடிகள்.. அவர்களின் மூளையே மூளை. சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு இளைஞர் கம்பெனி கொடுப்பதற்காகவே ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெறுகிறார் என்கிற செய்தி வெளியானது.

அதாவது அவரை பெண்கள் ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லலாம், சினிமாவுக்கு கூட்டி செல்லலாம்.. தங்களின் மனக்குறைகளை அவரிடம் சொல்லலாம் அவர் பொறுமையாக கேட்பார். இதன் மூலம் மன அழுத்தம் குறையும்.. தனிமையிலிருந்து விடுபடலாம் என்பதுதான் நோக்கம். அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அவர் வசூல் செய்து வருகிறார்.

இந்நிலையில்தான், சும்மா சொரிந்துவிட்டு மாதம் 14 லட்சம் சம்பாதிக்கும் ஒரு இளைஞர் பற்றிய செய்தி தற்போது வெளியே வந்திருக்கிறது. சீனாவில் ஜாங் என்பவர் சொரிந்து விடும் ஒரு சாதாரண செயலை தொழிலாக மாற்றி ஒரு மணி நேரத்திற்கு ரூ.4,200 விதம் மாதம் ரூ.14 லட்சம் வரை சம்பாதிக்கிறாராம்..

கடந்த வருடம் சமூகவலைதளத்தில் ஒரு பெண் தன் கணவருக்கு முதுகு சொரிவதை பார்த்து இப்படி ஒரு யோசனை வந்ததாக அவர் கூறியிருக்கிறார்.. அதோடு இந்த சேவை மன அழுத்தத்தை குறைத்து உடலை ரிலாக்ஸாக செய்வதாக வாடிக்கையாளர்களும் தெரிவித்துள்ளனர்.. சீனாவில் 100க்கும் மேற்பட்ட கிளைகளை திறப்பதே தனது இலக்கு எனவும் ஜாங் தெரிவித்து இருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த