இந்தியா

யுடியூப்பில் சமையல் கற்று மாசம் ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!

தற்போதெல்லாம் இளைஞர்கள் செய்வதற்கு பல புது புது தொழில்கள் வந்து விட்டன. சாஃப்ட்வேர் துறையில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நபர்கள் கூட தைரியமாக அந்த வேலையை விட்டுவிட்டு சமோசா கடையும், காப்பி ஷாப்பும் வைத்து அதைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்கள்..

இது தொடர்பான பல செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது யுடியூப்பில் சமையல் கற்று ஒரு இளைஞர் மாதம் 25 லட்சம் சம்பாதிக்கும் செய்தியை இங்கு பார்ப்போம்..

போபாலை சேர்ந்த வாலிபர் அபிஷேக் சாஹூ. முதலில் காப்பி கடையை நடத்தியிருக்கிறார். ஆனால் அது தோல்வியில் முடிந்து நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் யுடியூப்பில் எப்படி சாண்ட்விச் செய்வது என்று பல வீடியோக்களை பார்த்திருக்கிறார். தெரிந்தவர்களிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி ஒரு தள்ளிவண்டி கடையில் சான்விட்ச் விற்பனை செய்திருக்கிறார்.

வித்தியாசமான, புது புது சுவைகளில் சாண்ட்விச் ரெசிபிகளை அவரே உருவாக்கியிருக்கிறார். தரம், சுவை, குறைந்த விலை போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் குவிய துவங்கினர். தற்போது மாதம் சுமார் ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் அளவுக்கு அந்த தொழில் அவருக்கு கை கொடுத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்