இந்தியா

பாஜக எம்.எல்.ஏவை செருப்பால் அடிக்க வேண்டும்.. ஆவேசமாக பேசிய அமைச்சரால் பரபரப்பு..

கர்நாடகாவில் பத்ரா நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் கோரி சென்ற விவசாயிகளிடம், பாஜக எம்.எல்.ஏ பி.பி. ஹரீஷ் குறித்து மாநில அமைச்சர் எஸ்.எஸ். மல்லிகார்ஜுன் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தங்களை சந்திக்க எம்.எல்.ஏ அனுப்பியதாக கூறியதும் ஆத்திரமடைந்த அமைச்சர், பாஜக எம்.எல்.ஏ-வை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். அமைச்சரின் இந்த நாகரிகமற்ற பேச்சுக்கு பாஜக எம்.எல்.ஏ ஹரீஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அமைச்சர்கள் இதுபோன்று அநாகரிகமாக நடப்பது கண்டனத்திற்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சரின் இந்த செயலுக்கு மாநில மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா அமைச்சரின் பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அமைச்சரின் மிரட்டல் மற்றும் அவதூறான வார்த்தைகள் எம்.எல்.ஏ-வை மட்டுமல்லாமல், அந்தத் தொகுதி மக்களையும் அவமதிக்கும் செயலாகும் என்று அவர் விமர்சித்துள்ளார். அதிகார மமதையில் அமைச்சர்கள் இதுபோல் நடந்துகொண்டால் மக்கள் உரிய பதிலடி தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்