சினிமா

நள்ளிரவில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிளாக் பாண்டி

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிளாக் பாண்டி; அதிர்ச்சியில் போட்டியாளர்கள பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது பிக்பாஸ். ஆரம்ப காங்களில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் திடீரென விலகிவிடவே விஜய் சேதுபதி உள்ளே வந்தார். ஆவரும் கமல்ஹாசனுக்கு இணிஅயாகவே நிகழ்ச்சியை நடந்தி வந்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் 10-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனில் பிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இதனால் தொடங்கிய முதலே பிக்பாஸ் வீடு பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் 10-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிளாக் பாண்டி , தற்காலிகமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவப் பிரச்சனை காரணமாக பிளாக் பாண்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளாக் பாண்டி திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம், சக போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து பிக்பாஸ் தரப்பில் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பிளாக் பாண்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா என்பது ரசிகர்களிடையே தற்போது கேள்வியாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்