இசைஞானி இளையராஜா 40 வருடங்களுக்கு மேல் தமிழ் திரையுலகில் இசையமைத்து வருகிறார். ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவருக்கு மூன்று முறை தேசிய விருதும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசைக்காக சில படங்களுக்கு அவர் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், இலங்கை திரைப்படமான அந்தோணி என்கிற படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், 2027ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவிற்கான தேர்வு குழுவிற்கு இந்த படம் அனுப்பப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இளையராஜா இசையமைத்த கோந்தல் என்கிற மராத்தி திரைப்படம் 2027ம் வருடத்திற்கான ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது,.இப்போது அந்தோணி படமும் இதில் இணைந்திருப்பதால் இளையராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கண்டிப்பாக ஏதேனும் ஒரு ஆஸ்கர் விருது இளையராஜாவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

