இந்தியா

சபாநாயகர் ஆக்சன் சொல்றார்!. விஜய் பன்ச் வசனம் பேசுறார்!.. உதயநிதி அட்டாக்!…

2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. தவெகவின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திமுக தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது.

இந்நிலையில்தான், திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘முன்பெல்லாம் சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதில் சொல்வார்கள்.. ஆனால் இப்போதெல்லாம் நாங்கள் கேள்வி கேட்டால் தவெக உறுப்பினர்களும், அமைச்சர்களும் பாட்டு பாடுகிறார்கள்.. சபாநாயகரும் பாட்டு பாடுகிறார்… இது சட்டசபையா? இல்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா என்கிற சந்தேகமே எங்களுக்கு வருகிறது.

நாங்கள் எந்த கேள்வி கேட்டாலும் முதலமைச்சர் விஜய் பேசுவதே இல்லை.. அவர் பேச ஆரம்பித்தால் பன்ச் வசனம் மட்டுமே.. அதுவும் எங்களை பார்த்து பேசுவதில்லை.. எங்கே கேமரா இருக்கிறதோ.. அங்கே பார்த்து சபாநாயகரிடம் அனுமதி வாங்கி.. அவர் ஆக்சன் சொன்னவுடன்.. விஜய் பன்ச் வசனம் பேசுகிறார்.. இதுதான் சட்டசபையில் நடக்கிறது’ என அவர் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்