உலகம்

ஈரான் விமானங்கள் தரையிறங்க எந்த நாடும் அனுமதிக்க கூடாது.. டிரம்ப் உத்தரவால் உலகம் முழுவதும் பரபரப்பு..

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரான் விமான சேவைகள் சர்வதேச அளவில் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

ஈரானிய விமானங்களுக்கு எரிபொருள், தரைவழி சேவைகள் அல்லது டிக்கெட் விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது அமெரிக்கா கடுமையான இரண்டாம் நிலை தடைகளை விதிக்கவுள்ளது. இந்தத் தடைகளை மீறும் நிறுவனங்கள் அமெரிக்க டாலர் அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் கடந்த பிப்ரவரி முதல் அமெரிக்கா-ஈரான் இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. வாஷிங்டனின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானிய விமானங்களின் சேவைகளை ஈராக் மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகள் நிறுத்தியுள்ளன.

மேலும், துருக்கி அரசுகளின் கோரிக்கையை ஏற்று மாஹன் ஏர் நிறுவனமும் தனது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஈரானின் பொருளாதார மற்றும் ராஜதந்திர கூட்டாளியான சீனாவுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த