கோலிவுட்டில் முக்கிய நடிகரா இருப்பவர் சூர்யா. கடந்த சில வருடங்களாகவே அவரின் படங்கள் வெற்றி பெறாத நிலையில் கருப்பு திரைப்படம் ரூ.330 கோடி வசூல் செய்து பெரிய சாதனை படைத்து விட்டது. அதேபோல், வெங்கி அட்லூரி இயக்கத்தில் மமிதா பைஜுவுடன் இணைந்து சூர்யா நடித்து வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் ஒரு வெற்றி படமாக அமைந்துவிட்டது.
இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் சூர்யா. அடுத்து மலையாள பட இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அதேபோல் அடுத்தடுத்த படங்களை சூர்யா கமிட் செய்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில்தான், மணிரத்தினம் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. அதாவது 8 வருடங்களுக்கு முன்பு சூர்யாவுக்கு மணிரத்னம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஆனால் என்ன காரணமோ அப்போது அது டேக் ஆப் ஆகவில்லை.. தற்போது அந்த கதையை கொஞ்சம் மாற்றி மெருகேற்றி சூர்யாவுக்கு மணிரதனம் மீண்டும் சொல்லியிருக்கிறாராம். மணிரத்னம் தற்போது விஜய் சேதுபதி – சாய் பல்லவியை வைத்து இஞ்சி வெல்லம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். எல்லாம் சரியாக அமைந்தால் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் சூர்யா நடித்திருந்தார். அதன்பின் அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

