நடிகர் தனுஷுக்கு கடந்த சில படங்கள் கை கொடுக்காத நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி என அறிவித்திருக்கிறார்கள்.
எனவே, ரஜினியோடு தனுஷ் போட்டி போடுகிறார் என்கிற இமேஜ் உருவானது. இந்நிலையில், அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 படம் வருவதால் அக்டோபர் 16ம் தேதி ஓம் படம் வெளியாகியது என தற்போது தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
அதேபோல் ஓம் திரைப்படம் தீபாவளிக்கும் வெளியாகாது.. ஏனெனில் சூர்யா சாரின் சீன் திரைப்படம் அதே தேதியில் வெளியாவதால் ஓம் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். தனுஷின் இந்த முடிவு அவரின் ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

