இந்தியா

10 ஆயிரம் சம்பள பாக்கி!.. 24 கோடி மதிப்பிலான பொருளை எரித்த ஊழியர்..

குஜராத் மாநிலம் சூரத்தில் ஷியாம் சங்கினி ஜவுளி சந்தை மிகவும் பிரபலம். அங்கே பல ஜவுளிக்கடைகள் அமைந்திருக்கிறது. 639ம் எண் கடையில் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர் வினோத் பண்டிட். ஆனால், வேலை படிக்காததால் கடந்த ஜூன் மாதம் அவர் வேலையை விட்டு நின்று விட்டார்..

அவருக்கு கடையின் உரிமையாளர் 10 ஆயிரம் சம்பள பாக்கி கொடுக்க வேண்டியிருந்தது. அவர் பலமுறை கேட்டும் உரிமையாளர் அந்த பணத்தை அதை கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த வினோத் 150 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி கடந்த 8ம் தேதி இரவு 9 மணி அளவில் ஷியாம் சங்கினி பஜாருக்கு வந்திருக்கிறார்.

அங்கே ஆள் நடமாட்டம் குறைந்ததும் நள்ளிரவு 12 மணியளவில் முகத்தை வெள்ளை துணியால் மூடிக்கொண்டு தான் வேலை பார்த்த கடைக்கு சென்று அங்கு வெளியே வைக்கப்பட்டிருந்த துணிப்பைகள், துணி மூட்டைகள் மீது பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்திருக்கிறார்.

அங்கே அருகருகு ஜவுளிக்கடைகள் இருந்ததால் தீ பக்கத்து கடைகளுக்கும் பரவியது. இதில் மொத்தம் 14 கடைகள் பாதிக்கப்பட்டது. முதலில் இது விபத்து என நம்பப்பட்டது. அதன் பின் சிசிடிவி பதிவை ஆராய்ந்த போது தான் இதை வினோத் செய்தது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் 24 கோடி மதிப்பிலான துணிகள் சம்பலாகிவிட்டது. போலீசார் தன்னை தேடுவது அறிந்த வினோத் தலைமறைவாகிவிட்டார். அதன்பின் அவர் சூரத் திரும்பிய போது போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்