இந்தியா

தமிழ்நாட்டில் வெயில் பொளக்கப்போகுது!.. எச்சரிக்கும் வெதர்மேன்!..

சமீப காலமாகவே எல் நினோ என்கிற வார்த்தை பரவலாக பல செய்திகளில் அடிபடுகிறது. பசுபிக் பெருங்கடல் பகுதியில் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் இயற்கையான காலநிலை மாற்றத்தை தான் எல் நினோ என அறிஞர்கள்கள் அழைக்கிறார்கள்.

எல் நினோ காரணமாக உலகளாவிய வானிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. சில பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படுவதோடு பருவமழையும் குறைகிறது. சில இடங்களில் அதிகப்படியான மழை பெய்து வெள்ளப்பெருக்கும் ஏற்படும். இந்தியாவைப் பொறுத்தவரை பருவமழை குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.. அதில் வெப்ப நிலை அதிகரித்து வருவதை சூப்பர் எல் நினோ என சொல்கிறார்கள்.

கோடை காலம் முடிந்த பின்னரும் கடந்த மூன்று மாதங்களாகவே தமிழகத்தை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில்தான் சூப்பர் எல் நினோ காரணமாக ஏற்பட்ட வெயிலின் தாக்கம் தமிழ்ழ்நாட்டில் மேலும் 2 -3 வாரங்கள் நீடிக்கும் எனவும், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்பதால் அதிக நீர்ச்சத்துடைய பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரித்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்