இந்தியா

எங்க தலைவர் பெண்ணின போராளி!.. அவர் அப்படி சொல்லல!. சேகர்பாபு விளக்கம்!…

தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தவெக ஆட்சியையும், முதலமைச்சர் ஜோசப் விஜயின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

அப்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாமாவுக்கு மற்றொரு பெயர் உண்டு.. பெட்டி பாமா.. பல்டி பாமா.. இந்த உருவத்தை வைத்துக் கொண்டு அவர் எப்படி பல்டி அடித்தார் என்று தெரியவில்லை’ என ஸ்டாலின் பேசினார். இதையடுத்து ஸ்டாலின் உருவக்கேலி செய்தது தவறு என பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் ஸ்டாலினின் பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். மேலும், ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமார் போன்ற தவெக அமைச்சர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். உருவக்கேலி செய்த முக ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ‘எங்க தலைவர் பெண்ணினத்தின் பேரொளியாக திகழ்பவர்.. தேர்தல் பரப்புரையில் அந்த வேட்பாளர் செயலுக்காக பயன்படுத்தி சொல்தானே தவிர.. அது அந்த வேட்பாளர் பற்றிய தனிப்பட்ட கருத்து அல்ல’ என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்