இந்தியா

உங்களால் நாடு பெருமை கொள்கிறது!.. நடிகர் ஷாருக்கான் பதிவு…

சில நாட்களுக்கு முன்பு ஃபிளை துபாய் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி தாக்கி கத்தியால் குத்தி விமானத்தை வேகமாக தரை இறக்கி விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமானத்தில் 174 பயணிகள் இருந்த நிலையில் விமானி ஸ்மித் மச்சார் காயப்பட்ட நிலையிலும், அவரின் திட்டத்தை முறியடித்து பயணிகளின் உதவியோடு விமானத்தை துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

ஸ்மித் மச்சாரை ஒரு நிஜமான ஹீரோ என நாடே கொண்டாடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஸ்மித் வீடியோ காலில் அவரிடம் பேசி உடல் நலம் விசாரித்தார். அதேபோல இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவரும் ஸ்மித் மாச்சாரை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ‘கேப்டன் மச்சார்.. மிகவும் முக்கியமான அந்த தருணத்தில் நீங்கள் உறுதியுடன் செயல்பட்டீர்கள். துணிச்சலுடன் சவால்களை எதிர்கொண்டு உயிரை பணயம் வைப்பது சுலபம் இல்ல. ஆனால், விமானத்தில் இருந்தவர்களை பாதுகாக்க நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் விரைவில் குணமடையை பிரார்த்திக்கிறேன். நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது’ என பதிவிட்டிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்