சினிமா

விஜய்க்கு கொண்டாட்டங்களில் விருப்பமில்லை, ஆனால்…ரஷ்மிகா மந்தனா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் பேராதரவைப் பெற்று பான்-இந்தியா அளவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தவர் ரஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் கிரிக் பார்ட்டி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளிலும் வெற்றிகரமான நாயகியாகத் தொடர்ந்து வலம் வருகிறார்.

குறிப்பாக, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் ஜோடி சேர்ந்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்கள் இருவருக்குமான ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக்கின. அதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் நடித்த புஷ்பா திரைப்படத் தொடர் அவரது புகழை எல்லை கடந்து கொண்டு சேர்த்தது. நீண்ட காலக் காதலுக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா இருவரும் கடந்த பிப்ரவரி 2026-ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு தங்களின் வாழ்க்கைப் பார்வை மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ரஷ்மிகா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா எதையும் கொண்டாடும் வழக்கம் கொண்டவர் அல்ல. ஆனால் நான் வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு தருணத்தையும், பிறந்தநாளையும் உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என விரும்புபவள். காலம் நகர நகர நாம் வயதாகிக் கொண்டே போகிறோம்; இந்த உலகில் நாம் வாழும் நாட்கள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. அதனால் நினைவுகளைச் சேர்ப்பதும் கொண்டாடுவதும் முக்கியம் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதே சமயம், இதற்குப் பதிலளித்த விஜய் தேவரகொண்டா, தனக்கு கொண்டாட்டங்களில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும், ரஷ்மிகாவின் வரவுக்குப் பிறகு தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கொண்டாட்டத் தருணங்களும் அதிகரித்திருப்பதாகப் புன்னகையுடன் பகிர்ந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்