2026-ஆம் ஆண்டிற்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கார்ல் டெய்சோர்த், பீட்டர் ஹெகிமான் மற்றும் ஜார்ஜ் நகேல் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூளையின் செயல்பாடு, நினைவுகள் மற்றும் உணர்வுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை புரிந்து கொள்வது மருத்துவ ஆராய்ச்சியில் நீண்டகால சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில், உயிருடன் இருக்கும் மூளையில் உள்ள தனிப்பட்ட நரம்பு செல்களின் செயல்பாட்டை ஒளியை பயன்படுத்தி இயக்கும் மற்றும் நிறுத்தும் ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக இவர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.
ஒளி-தூண்டல் அயனி சேனல்கள் பற்றிய இவர்களது கண்டுபிடிப்பு, நரம்பியல் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மூளையின் மர்மமான நரம்பு மண்டல அமைப்பை பற்றி விரிவாக ஆராயவும், நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு புதிய சிகிச்சை முறைகளை கண்டறியவும் இந்த முறை உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

