கனடா

கனடாவில் சிறுவர்களை குறிவைக்கும் AI மோசடி எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களின் பாலியல் ரீதியிலான போலி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்கி, அவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் கனடாவின் தேசிய தகவல் மையமான Cybertip.ca எச்சரித்துள்ளது. சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான தளமாக இந்த மையம் இயங்கி வருகின்றது. குற்றவாளிகள் சிறுவர்களின் சுயவிவரப் படங்களை மட்டுமே பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் பாலியல் ரீதியிலான போலி காட்சிகளை உருவாக்கும் புதிய போக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையானது போல் தோன்றும் வகையில் ஒருவரைப் பாலியல் ரீதியாக அல்லது துஷ்பிரயோகம் செய்யும் விதமாக சித்தரிக்கும் வகையில் இவை மாற்றியமைக்கப்படுகின்றன. முன்னர் குற்றவாளிகள் சிறுவர்களை வற்புறுத்தியோ அல்லது ஏமாற்றியோ புகைப்படங்களைப் பெற முயன்ற நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் முக அமைப்பைக் கொண்டு நேரடியாகவே போலி உள்ளடக்கங்களை உருவாக்கும் நிலைக்கு மாறியுள்ளனர். இந்த மையத்தை இயக்கும் ‘குழந்தை பாதுகாப்புக்கான கனடிய மையம்’ நடத்திய ஆய்வில், கனடாவில் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளாகும் 10 பதின்ம வயதினரில் 9 பேர் தனிப்பட்ட செய்தி அனுப்பும் தளங்கள் வழியிலேயே பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராம், டெலிகிராம், எக்ஸ் மற்றும் டிஸ்கோர்ட் உள்ளிட்ட தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை வைத்தே இவ்வாறான போலிகள் உருவாக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. பெரியவர்கள் கண்காணிக்க முடியாத இணைய வழிகளை குற்றவாளிகள் இலக்கு வைப்பதாகவும், போலிப் படங்கள் பரவுவதைத் தடுக்க அச்சுறுத்தல்களுக்குப் பயந்து பலர் பணம் அனுப்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு