சினிமா

ரஜினியின் தர்மன் ரிலீஸில் திடீர் மாற்றம்? கமலின் இந்தியன் 3 காரணமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2 . நெல்சன் இயக்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இரண்டாம் பாகம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தர்மன் . இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். ரஜினி – கமல் கூட்டணி தயாரிப்பாளர், நடிகர் என்ற வகையில் இணைந்திருப்பதும் இப்படத்தின் முக்கிய சிறப்பாக பார்க்கப்படுகிறது.

தர்மன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை விரைவாக முடித்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் திட்டமிட்டபடி மேற்கொண்டு, 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குக் காரணமாக கமல்ஹாசனின் இந்தியன் 3 திரைப்படம் கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் படத்தின் அடுத்த பாகமான இந்தியன் 3 -ஐ 2027 பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 3 மற்றும் அவரது நிறுவனம் தயாரிக்கும் ரஜினிகாந்தின் தர்மன் ஆகிய இரண்டு பெரிய படங்களும் திரைக்கு வந்தால், திரையரங்குகள் ஒதுக்கீடு முதல் வசூல் வரை இரண்டு படங்களுக்குமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்களும் ஒரே பண்டிகை காலத்தை குறிவைப்பது வணிக ரீதியாக சரியான முடிவாக இருக்காது என்பதால், தர்மன் படத்தின் வெளியீட்டை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இதையடுத்து தர்மன்’ படத்தை 2027 ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடலாம் என கமல்ஹாசன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் பொங்கல் ரேஸில் இந்தியன் 3 களமிறங்க, கோடை விடுமுறை சீசனை குறிவைத்து ரஜினியின் தர்மன் வெளியாகும் சூழல் உருவாகும்.

இருப்பினும், தர்மன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை . படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்தே இறுதி வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்