இந்தியா

பாஜகவை காலி பண்ணதே நாங்கதான்!.. இல்லனா இதுதான் நடந்திருக்கும்!.. ஆதவ் அர்ஜுனா பேட்டி…

2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்து விஜய் முதலமைச்சராகிவிட்டார். 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீத வாக்குகளை பெற்றது. அதாவது, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, விடுதலை சிறுத்தைக் கட்சி போன்ற கட்சிகளின் வாங்கு வங்கி கடுமையாக சரிந்துவிட்டது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக 2026 தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. விஜய் தவெகவை தொடங்கிய போதே பாஜக தனது கொள்கை எதிரி என அறிவித்துவிட்டார். அதேநேரம், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அக்கட்சியுடன் இணக்கமாக சென்று தமிழகத்திற்கு தேவையான நிதிகளை பெற்றுவிட வேண்டும் என அவர் நினைக்கிறார். எனவே, பாஜகவை தவெக அமைச்சர்கள் விமர்சிப்பது இல்லை. இதை கையிலெடுத்த திமுக தவெக பாஜகவை பார்த்து பயப்படுகிறது.. பாஜகவுக்கு அடிமையாகிவிட்டது என பேசி வருகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘தவெகவால்தான் 4 சீட்களில் இருந்த பாஜக இப்போது ஒரு சீட்டில் சுருங்கியிருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்கவும் இல்லை.. எதிர்க்கவும் இல்லை.. சித்தாந்த ரீதியில் பாஜக எங்களின் எதிரிதான்.. 2026-ல் தவெக மட்டுமில்லையென்றால் திமுக மீதான வெறுப்பில் அதிமுக – பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும்.. அதை தடுத்தது தவெகதான்’ என சொல்லியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்