இந்தியா

சென்னையில் அடுத்தகட்ட மழை வாய்ப்பு எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

சென்னையில் நேற்று மழையின் தீவிரம் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது பிரபல வானிலை பதிவர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ கணித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னைக்கு மிக அருகில் நிலவுவதால், பிரதான மழை மேகங்களின் இணைப்புப் பகுதி சென்னைக்கு வடக்கே, அதாவது தெற்கு ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது.

எனவே, சென்னை முழுவதும் ஒரே நேரத்தில் மீண்டும் 200 மி.மீ-க்கும் அதிகமான மிகப்பெரிய கனமழை பெய்ய வாய்ப்புகள் மிகக் குறைவுதான். வரலாற்று ரீதியாக, ஒரே வளிமண்டல சுழற்சியால் இடைவெளியின்றி அடுத்தடுத்த நாட்களில் சென்னைக்குத் தொடர்ச்சியாக 200 மி.மீ-க்கு மேல் அதிகனமழை பதிவானதில்லை. இன்று இரவில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருந்தாலும், நேற்றைய அளவுக்கு ரெட் அலர்ட் மழை வரக் குறைவான சாத்தியக்கூறுகளே உள்ளன.

எனினும், அடுத்தகட்டமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள வட தமிழகக் கடலோரப் பகுதிகள் கவனிக்க வேண்டிய மிக முக்கியக் கட்டம் அக்டோபர் 21 – 22 தேதிகள் ஆகும். அன்றைய தினங்களில் மீண்டும் ஒரு புதிய மழைக்கான வாய்ப்பு உருவாகக்கூடும். எனினும் மேகக் கூட்டங்கள் ஏதேனும் திடீரென மாறினால் உடனடி அறிவிப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்