நடிகர் ரஜினி 1980களில் எப்போது ஹீரோவாக நடித்த தொடங்கி ஹிட் படங்களை கொடுத்த தொடங்கினாரோ அப்போதிலிருந்து இப்போது வரை இந்திய சினிமாவில் வசூல் மன்னனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவரின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ.425 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தனது சாதனையை தானே முறியடிப்பது போல ரஜினி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
2026 தொடங்கி தற்போது வரை விஜயின் ஜனநாயகம் 300 கோடியும், சூர்யாவின் கருப்பு திரைப்படம் 340 கோடியும் வசூல் செய்திருந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் 2 நான்கு நாட்களில் 400 கோடி வசூலை தாண்டிவிட்டது. எப்படியும் இந்த திரைப்படம் மொத்தமாக 800 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்க்கும்போது கண்டிப்பாக 2026-ல் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக ஜெயிலர் 2 இருக்கும் என கணிக்கப்படுகிறது.

