உலகம்

நான் மிரட்டினேன்.. அதனாலதான் இந்தியா – பாகிஸ்தான் போர் நின்னுச்சு!.. அடங்காத டிரம்ப்!…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இரண்டு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் அதில் மூக்கை நுழைத்து கருத்தை சொல்லுவார். சில சமயம் போரை நிறுத்தவும் முயற்சி செய்வார். அதேநேரம், இவரே ஈரான் மீது போர் தொடுப்பார். திடீரென இந்தியா – சீனா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் வரிகளை உயர்த்துவார். அதன் பின் அதை குறைக்கிறேன் என சொல்வார்..

சில நாட்களுக்கு முன்பு கூட ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு 100 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்தார். ஆனால் ரஷ்யாவிடம் அமெரிக்காவே டீசல் வாங்கும் நிலை ஏற்பட்டதால் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைத்தார்.

ஒருக்கம் ‘இதுவரை 8 போர்கள் நிறுத்தியிருக்கிறேன். ஆனாலும் எனக்கு நோபல் பரிசு தரப்படவில்லை’ என டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில்,

நேற்று அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப் ‘இந்தியா – பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் 250 சதவீதம் வரி விதிப்பேன் என பயமுறுத்தினேன் அதனால்தான் அவர்கள் இடையான போர் நின்றது’ என்று கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த