சினிமா

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தோழிகளுடன் இலங்கை சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

தொடர் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த ராஷ்மிகா, தற்போது கிடைத்துள்ள இரண்டு நாள் விடுமுறையை தனது நெருங்கிய பெண் தோழிகளுடன் இலங்கையில் கொண்டாடி வருகிறார். அங்கு எடுக்கப்பட்ட மகிழ்ச்சியான புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆனால், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது சாதாரணச் சுற்றுலா அல்ல, இது ராஷ்மிகாவின் ‘பாச்சுலர் பார்ட்டி’ என திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்.

நீண்ட நாட்களாகக் கிசுகிசுக்கப்படும் ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமணம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாகவும், அதன் காரணமாகவே தனது தோழிகளுக்கு அவர் விருந்து கொடுத்து வருவதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

“ஆண்டு இறுதியில் மறக்க முடியாத பயணம்” என ராஷ்மிகா இதை குறிப்பிட்டாலும், ரசிகர்கள் இதனை திருமண கொண்டாட்டமாகவே பார்க்கின்றனர். இதனால் ராஷ்மிகாவின் திருமணம் குறித்த விவாதங்கள் தற்போது கோலிவுட் முதல் டோலிவுட் வரை சூடுபிடித்துள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்