உலகம்

17 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது: இப்போது 18வது நாடும் அறிவிப்பு.. டிரம்ப் கடுமையான உத்தரவு..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களை கூறி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அதிரடியாக பயணத் தடை விதித்துள்ளார். இதன்படி ஆப்கானிஸ்தான், ஈரான், ஏமன், சோமாலியா, சிரியா, லிபியா மற்றும் சூடான் உள்ளிட்ட சுமார் 17 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய பயண ஆவணங்களை வைத்திருக்கும் நபர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய டிரம்ப் நிர்வாகம் முழுமையாக தடை விதித்துள்ளது. பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அமெரிக்கா அங்கீகரிக்காத நிலையில், அவர்களை ஆவணதாரர்கள் என்றே அந்நாடு குறிப்பிடுகிறது.

பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், இந்த தடை உத்தரவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லை பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த