கனடா

தீவிரமடையும் Influenza காய்ச்சலால் மூன்று குழந்தைகள் பலி!

ஒன்ராறியோவில் தீவிரமடையும் Influenza காய்ச்சலால் மூன்று குழந்தைகள் பலி!

ஒன்ராறியோ மாகாணத்தில் இந்த வருட ஃபுளூ பருவகாலம் மிகவும் சவாலாக அமைந்துள்ள நிலையில், Influenza A தொடர்பான சிக்கல்களால் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த துயரச் சம்பவங்கள், மாகாணத்தில் ஃபுளூ காய்ச்சலின் தீவிரத்தன்மையையும், தடுப்பூசியின் அவசியத்தையும் மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த தொற்று நோய் நிபுணரான வைத்தியர் ஐசக் போகொச் நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்தார். இந்த பருவகாலம் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது எனவும், மருத்துவமனைகளில் ஃபுளூ தொடர்பான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஃபுளூ தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை” என வைத்தியர் போகொச் உறுதியாகத் தெரிவித்தார். தடுப்பூசி பெறுவது, நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும், மரணத்தைத் தடுப்பதற்கும் சிறந்த வழியாகும் என அவர் வலியுறுத்தினார்.

பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாகத் தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் ஃபுளூ தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது தனிநபர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாது, சமூகத்தில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் உதவும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு