உலகம்

இன்னொரு போர் விரைவில் ஆரம்பிக்கும்: 10 போர்களை நிறுத்திய டிரம்ப் அறிவிப்பு..!

வெனிசுலா நாட்டுடன் போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தற்போதைக்கு அதிகாரிகளுடன் ஆலோசிக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் போர் நடப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

வெனிசுலா அரசு தொடர்ந்து எண்ணெய் கப்பல்களை இயக்கினால், அவற்றை அமெரிக்க துறைமுகங்களுக்கு திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவை ‘போதைப்பொருள் பயங்கரவாதி’ என்று அறிவித்துள்ள அமெரிக்கா, அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு 5 கோடி டாலர் சன்மானம் அறிவித்துள்ளது.

கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது கடற்படையை பெருமளவில் குவித்துள்ளதால், எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த வாரம் வெனிசுலாவின் பிரம்மாண்ட எண்ணெய் கப்பலை அமெரிக்க கடலோர காவல் படை கைப்பற்றியது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை உச்சக்கட்டத்திற்கு தள்ளியுள்ளது. மடூரோ உடனடியாக பதவியை விட்டு விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் டிரம்ப் நிர்வாகம் உறுதியாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த