நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ஹிந்தித் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் ஹிந்தி மொழியில் வெளியாகும் இந்த படத்திற்கு ‘ஜன் நேத்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘ஜன நாயகன்’ என்பதற்கு இணையான ‘மக்களின் தலைவர்’ என்ற பொருளிலேயே இந்த தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் இது கடைசி திரைப்படம் என்பதால், இந்திய அளவில் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27-ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாக உள்ளதால், வட இந்தியாவிலும் விஜய்க்கு பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

