பொதுவாகவே இந்தியா உட்பட பல நாடுகளிலும் அவ்வப்போது பேரழிவுகள் ஏற்படும். சுனாமி, தீ பிடிப்பது, மழை வெள்ளத்தால் மக்கள் மடிவது, மண் சரிவு ஏற்பட்டு மக்கள் இறப்பது என பல இயற்கை பேரழிவுகளால் மக்கள் உயிரிழப்பு ஏற்படும். மக்களை பாதுகாக்கலாமே தவிர நடப்பதை தடுக்க முடியாது. இன்னமும் இயற்கை பேரழிவுகளை முழுதாக கணிக்கும் அளவுக்கு உலக விஞ்ஞானமும் முன்னேறவில்லை.
ஒருபக்கம் உலக பேரழிவுகளை கணிப்பதாக சில தீர்க்கதரிசிகளும் உலக நாடுகளில் இருக்கிறார்கள். இந்த வருடம் சுனாமி வரும், இந்த வருடம் மழை வெள்ளத்தில் மக்கள் இறந்து போவார்கள், இந்த வருடம் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும், இந்த வருடம் ஒரு முக்கிய அரசியல் தலைவர் இறந்து போவார் என்றெல்லாம் அவர்கள் ஜோதிடம் சொல்வார்கள்.
ஆச்சரியப்படும் வகையில் அவற்றில் ஒரு சில விஷயங்கள் நிஜத்தில் நடப்பதும் உண்டு. அப்படி நடக்கும் போது அவர்களை கடவுளாக சிலர் வணங்குகி அவர்களை பின்பற்றுகிறார்கள். இந்நிலையில்தான் உலகமெங்கும் உள்ள மக்கள் நாளை கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் நிலையில் நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என தன்னைத்தானே தீர்க்கதரிசி என சொல்லிக் கொள்ளும் கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் கூறியிருக்கிறார்.
அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் அவர் கூறியதால் அவரை பின்தொடர்பவர்கள் தங்களை சொத்துக்களை விற்று அவருக்கு பணங்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

